விருத்தாசலம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு கத்திகுத்து

விருத்தாசலம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவத்தில் மாணவியின் நண்பர் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள கருவேப்பலங்குறிச்சி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகள் திலகா, தனியார் கல்லூரியில் படித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் திலகா தனியாக இருந்தபோது, மர்ம நபர் ஒருவர் திலகாவின் கை, கால் மற்றும் வயிற்று பகுதிகளில் கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றுள்ளார்.

ஆபத்தான நிலையில் இருந்த திலகாவை மீட்ட அவரது உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிருக்கு போராடி வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவியின் நண்பர் ஆகாஷ் என்பரை கைது செய்து விசாரணை வருகின்றனர்.

Exit mobile version