கிருஷ்ணகிரியில், கொலை வழக்கு ஒன்றில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தை அடுத்த மோஹனள்ளி கிராமத்தை சேர்ந்தவர் புட்டப்பன். இவருக்கும், இவரது அண்ணன் மகனான குப்பனுக்கும் இடையே நிலத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், குப்பனின் சகோதரர் கோவிந்தன் மற்றும் மகன்கள் கூட்டாகச் சேர்ந்து, புட்டப்பனை கடுமையாக தாக்கினர். இதில் புட்டப்பன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுதொடர்பான வழக்கு 3 ஆண்டுகளாக கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், கொலை செய்ய தூண்டி ஆயுதம் வழங்கிய குப்பனின் மனைவி சுந்தரி மற்றும் கொலையாளி கோவிந்தன் இருவருக்கும் ஆயுள் தண்டனையும், புட்டப்பனை கூட்டு சேர்ந்து தாக்கிய குப்பன், பிரபு, சக்திவேல் ஆகிய மூன்று பேருக்கும் 6 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.