பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் நிர்வாகி கொலை வழக்கில், லாலு பிரசாத் யாதவ் மகன்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆர்.ஜே.டி. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சக்தி மாலிக், அவரது வீட்டின் அருகே மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இறப்பதற்கு முன்பு தேர்தல் சீட் வழங்க லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி 50 லட்ச ரூபாய் கேட்டதாக புகார் தெரிவித்திருந்தார். கொலை செய்யப்பட்ட சக்தி மாலிக்கின் மனைவி அளித்த புகாரின் பேரில், லாலுவின் மகன்களான தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக புர்ணியா காவல் கண்காணிப்பாளர் விஷால் சர்மா தெரிவித்துள்ளார். ஆர்.ஜே.டி. – காங்கிரஸ் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.