இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் தொடக்க வீரரான தமிழகத்தைச் சேர்ந்த முரளி விஜய், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். வலது கை பேட்ஸ்மேனாக வலம் வந்தவர் முரளி விஜய். இந்திய அணிக்காக 61 டெஸ்ட் போட்டிகளிலும், 17 ஒருநாள் போட்டிகளிலும், 9 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இவர் இறுதியாக விளையாடிய போட்டி 2018ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியாகும்.
டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 3,982 ரன்கள் அடித்திருக்கு இவர் 12 சதங்களும், 15 அரை சதங்களும் அடித்திருக்கிறார். ஒருநாள் போட்டியைப் பொறுத்தவரை 339 ரன்களும், டி20யில் 169 ரன்களும் அடித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியபோது தான் இவர் மிகவும் புகழ்பெற்று விளங்கினார். தற்போது 38 வயதில் ஓய்வினை அறிவித்திருக்கும் முரளி விஜய், கிரிக்கெட் உலகிலும் அதன் வணிகப் பக்கத்திலும் நான் புதிய வாய்ப்புகளை ஆராய்வேன், அங்கு நான் விரும்பும் விளையாட்டில் தொடர்ந்து பங்கேற்பேன், புதிய மற்றும் மாறுபட்ட சூழல்களில் நானே எனக்கு சவால் விடுத்துக்கொள்வேன், மேலும் ஒரு கிரிக்கெட் வீரராக எனது பயணத்தில் அடுத்தப் படி இது என்று நான் நம்புகிறேன் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.