கிரிக்கெட் போட்டிகளில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் இர்ஃபான் பதான் ஓய்வு

இந்திய வேகப்பந்து வீச்சாளர் இர்ஃபான் பதான், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் இர்ஃபான் பதான் தனது 17 ஆண்டுக்கால கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வருகிறார். 2003ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியின் போது அணியில் இடம் பிடித்த பதான், 2006ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதற்கு அடுத்த ஆண்டு நடந்த இருபது ஓவர் உலக கோப்பை போட்டியிலும், இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற முக்கியப் பங்காற்றினார். இக்கட்டான சூழ்நிலையில், தொடக்க ஆட்டக்காரராகவும், 3ஆம் நிலை வீரராகவும் களம் இறங்கி பேட்டிங்கிலும் அசத்தியுள்ளார். இதுவரை 29 டெஸ்ட் போட்டி,120 ஒருநாள் போட்டி, 24 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள பதான், தற்போது அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார். இர்ஃபான் பதான் தற்போது விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தில் நடித்து வருவது குறிப்பிடத் தக்கது.

Exit mobile version