மூணாறில் தாவரவியல் பூங்காவை கேரளா சுற்றுலா துறை அமைச்சர் திறந்து வைத்தார்

மூணாறில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக 4 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தாவரவியல் பூங்காவை கேரள சுற்றுலா துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் திறந்து வைத்தார்.

மூணாறில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் பொழுதுபோக்கும் விதமாக கேரளா சுற்றுலாத்துறை சார்பாக மூணாறில் நவீன தாவரவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. 14 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவில் பலதரப்பட்ட மலர் செடிகள், தாவரங்கள் இடம் பெற்றுள்ளன. திறந்தவெளி திரையரங்குகள் உள்ளிட்ட சிறப்பு அம்சங்களுடன் இந்தப் பூங்கா ஏற்படுத்தப்பட்டுள்ளது. 4 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த தாவரவியல் பூங்காவை சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்தரன் திறந்து வைத்தார்.

Exit mobile version