திருச்சியில் மாநகராட்சி சார்பில் நடைபெற்ற திடக்கழிவு மேலாண்மை கண்காட்சி

திருச்சி மாநகராட்சி சார்பில் நடைபெற்ற திடக்கழிவு மேலாண்மை கண்காட்சியினை ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் கண்டு களித்தனர்.

திருச்சி மாநகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் வீட்டிலேயே குப்பைகளை உரமாக்குவது சம்பந்தமான கண்காட்சி, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. கண்காட்சியை மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் துவக்கி வைத்து பார்வையிட்டார். கண்காட்சியில் வீடுகள் மற்றும் இதர நிறுவனங்களில், தினசரி உற்பத்தியாகும் மக்கும் குப்பைகளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்க தேவையான சிறிய அளவிலான உபகரணங்கள் முதல், பெரிய வகை உபகரணங்கள் வரை காட்சிப்படுத்தப்பட்டன. உயிரி எரிவாயு தயாரிப்பு கருவிகள், சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெற வழிகள், மழைநீர் சேகரிப்பு முறைகள் ஆகியவை முன்னணி நிறுவனங்கள் மூலம் காட்சிபடுத்தப்பட்டு இருந்தன. 40 அரங்குகளாக அமைக்கப்பட்டிருந்த இந்த கண்காட்சியினை, ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் கண்டு, விளக்கம் கேட்டு அறிந்தனர்.

Exit mobile version