திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சி சந்தையை மேம்படுத்துவது தொடர்பாக, கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.
உடுமலை நகராட்சிக்குட்பட்ட வாரச்சந்தையில் 200க்கும் மேற்பட்ட கடைகள் நகராட்சியின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. ஏலம் எடுத்தவர்கள் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் செய்துள்ளதால் உடுமலை சந்தை இட நெருக்கடியால் திணறி வருகிறது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரையடுத்து கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வாரச் சந்தையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பல்வேறு இடங்களில் நகராட்சி அனுமதி இல்லாமல் போடப்பட்டிருந்த செட்டுகளை அகற்ற நகராட்சி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். ஏலம் எடுத்த நபர்கள் வசதியாக கடைகளை நடத்தவும், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.