சேலத்தில் குப்பைக் கிடங்கை பூங்காவாக்கும் திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

சேலத்தில் குப்பைக் கிடங்கை பூங்காவாக்கும் திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார்.

கடந்த 20 ஆண்டுகளாக, சேலம் மாநகராட்சி அருகே எருமைபாளையம் பகுதியில், குப்பைக் கிடங்கு செயல்பட்டு வருகிறது. இதனால் அங்கு குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளன. இதனிடையே, அப்பகுதியில் நிலத்தடிநீர் மட்டத்தை தக்க வைக்க, தமிழக அரசின் சார்பில் 20 கோடியே 45 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து, பூங்காவாக மாற்றும் செயல்பாட்டை, சேலம் மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இதில் 20 ஏக்கரில் உள்ள குப்பைகளை, 7 ஏக்கர் பரப்பளவில் கொட்டி, மீதமுள்ள இடங்களில், பூங்கா மற்றும் உடற்பயிற்சிக் கூடமாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டப்பணிகள் குறித்து, மாநகராட்சி ஆணையர் சதீஷ் ஆய்வு மேற்கொண்டார்.

Exit mobile version