பங்குசந்தைகளில் ஒரே நாளில் 5 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டதால் முதலீட்டாளர்கள் ஆனந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்
கடந்த இரண்டு வாரமாக மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்கு சந்தை நிஃப்டி ஆகியவை கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வந்தன.கரடியின் பிடிக்குள் பங்கு சந்தைகள் இருந்ததால் முதலீட்டாளர்களுக்கு கடுமையான இழப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் திங்கட்கிழமை வர்த்தகம் தொடங்கியவுடன் பங்குசந்தைகள் கடுமையான உயர்வை சந்தித்தன. மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாக வெளியானதால் இந்த உயர்வு காணப்பட்டது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 3 புள்ளி 75 சதவீதம் உயர்ந்திருந்தது. அதன்படி சென்செக்ஸ் முந்தைய நாளை விட 1422 புள்ளிகள் உயர்ந்து 39 ஆயிரத்து 352 புள்ளிகளீல் நிலை கொண்டது. இதேபோல தேசிய பங்கு சந்தை நிஃப்டி 3 புள்ளி 69 சதவீத உயர்வினை கண்டது.ஐடி துறை பங்குகளை தவிர்த்து மற்ற அனைத்து துறை பங்குகளும் அதிக லாபம் பார்த்தன