கோவில்பட்டியில் நடைபெற்று வரும் அகில இந்திய ஹாக்கி போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், தனியார் கல்வி நிறுவன அறக்கட்டளையின் சார்பில், 11-ஆம் ஆண்டு நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நாடுமுழுவதிலும் இருந்து 16 அணிகள் கலந்து கொண்டுள்ளன. போட்டியின் 4-வது நாள் ஆட்டத்தில், புவனேஷ்வர் ஈஸ்ட் கோஸ்ட் ரயில்வே அணியும், சண்டிகர் சிஐஎஸ்எப் அணியும் மோதின.
இந்த ஆட்டம் 2-க்கு 2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவு பெற்றது. அதேபோல் பெங்களூரு ஹாக்கி அசோசியேஷன் அணியும், மும்பை ஆல் இந்தியா கஸ்டம்ஸ் ஜிஎஸ்டி அணியும் சமநிலை கோல்களுடன் ஆட்டத்தை நிறைவு செய்தன. மும்பை யூனியன் வங்கி அணி, கோவில்பட்டி லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணியும் மோதியது. இதில் 5-க்கு 0 என்ற கோல் கணக்கில் மும்பை யூனியன் வங்கி அணி வெற்றி பெற்றது.