9 நாட்களாக சரிவுடன் காணப்பட்ட மும்பை பங்குசந்தை மீண்டும் ஏறுமுகம்

9 நாட்கள் தொடர் சரிவுக்கு பின்னர் மும்பை பங்கு சந்தை இன்று 403 புள்ளிகள் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். மும்பை பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிவுடன் காணப்பட்டது. தகவல் தொடர்பு நிறுவனப் பங்குகளின் வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் நேற்று நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 146 புள்ளிகள் சரிந்து 35 ஆயிரத்து 352 புள்ளிகளில் முடிவடைந்தது. தேசிய பங்கு சந்தை நிஃப்டி 36 புள்ளிகள் சரிந்து 10 ஆயிரத்து 604 புள்ளிகளாக நிலைத்தது.

இந்த நிலையில் இன்று மும்பை பங்கு சந்தை 403 புள்ளிகள் உயர்ந்து 35 அயிரத்து 756 புள்ளிகளில் முடிவடைந்தது.அதேபோன்று தேசிய பங்குச் சந்தையும் 131 புள்ளிகள் அதிகரித்து 10 ஆயிரத்து 735 புள்ளிகளில் முடிவடைந்தது. கடந்த 9 நாட்களாக சரிவுடன் காணப்பட்ட பங்குச் சந்தை இன்று ஏற்றம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version