மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் 489 புள்ளிகள் உயர்ந்ததால், முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
புதன்கிழமை வர்த்தகத்தின் முடிவில் 39 ஆயிரத்து 112 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இது செவ்வாய்கிழமையை காட்டிலும் 66 புள்ளிகள் உயர்வாகும். இதனிடையே இன்று பங்கு சந்தை ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தகத்தின் முடிவில் 39 ஆயிரத்து 601 புள்ளிகளில் நிலை பெற்றது. இது முந்தைய நாளை காட்டிலும் 489 புள்ளிகள் உயர்வாகும். தங்கத்தின் விலை உயர்ந்த நிலையிலும் பங்கு சந்தை உயர்வுடன் முடிவடைந்திருப்பது முதலீட்டாளர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. இதே போல், தேசிய பங்கு சந்தையும் உயர்வுடன் காணப்பட்டது. நிப்டி 140 புள்ளிகள் உயர்ந்து, 11 ஆயிரத்து 832 புள்ளிகளில் நிறைவு பெற்றது. யெஸ் வங்கி, இண்டஸ் இந்த் வங்கி, சன் பார்மா, எல் அண்ட் டி, இண்டியா புல்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகபட்ச உயர்வை சந்தித்தன.