மும்பை பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் வரலாற்றில் முதன்முறையாக 41 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டியது.
நேற்றைய வணிக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 40,889 ஆக இருந்தது. இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் 199 புள்ளிகள் உயர்ந்து 41,088 ஆக இருந்தது. சென்செக்ஸ் 41,000 புள்ளிகளைத் தாண்டியது வரலாற்றில் முதன்முறையாகும். இதேபோலத் தேசியப் பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு நிப்டி 46 புள்ளிகள் அதிகரித்து 12 , 120 ஆக இருந்தது.
பாம்பே டையிங், ரிலையன்ஸ் கேப்பிட்டல், எஸ் பேங்க், டாட்டா ஸ்டீல், சிப்லா, பிரிட்டானியா, ஐசிஐசிஐ வங்கி ஆகியவற்றின் பங்குவிலைகள் உயர்ந்துள்ளன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் பெருமளவு முதலீடு செய்ததே பங்குச்சந்தை ஏற்றத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.