சாலையில் செல்லும் போது தேவையில்லாமல் ஹாரன் அடிக்கும் பழக்கத்திற்கு மும்பை காவல்துறையினர் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
சாலைகளில் பயணிக்கும் போது பல நேரங்களில் தேவையில்லாமல் அடிக்கப்படும் ஹாரன்களால் நாம் உடல் மற்றும் மன ரீதியாக கடுமையாக பாதிக்கப்படுவோம். இந்தியாவில் இந்த பிரச்சனை சொல்லி மாளாது என்ற அளவிற்கு கோபத்தை வரவழைக்கும்.
இந்நிலையில் மும்பை போக்குவரத்து போலீசார் ‘the punishing signal’ என்ற பெயரில் புது திட்டத்தை அறிமுகம் செய்துள்ளனர். இதில் டிராபிக் சிக்னல்களுடன் டெசிபல் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதன்மூலம் சிக்னல்களில் தொடர்ச்சியாக அடிக்கப்படும் ஹாரன்களால் டெசிபல் அளவு 85 க்கு மேல் சென்றால் மேலும் சில நிமிடங்கள் நாம் காத்திருக்க வேண்டிருக்கும். அதாவது நிமிடங்கள் தானாகவே ரீசெட் ஆகிவிடும்.
இது சம்பந்தமான வீடியோவிற்கு அனைவரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆனால் அவசர நேரங்களில் இது எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரியவில்லை.