மும்பை 'பெஸ்ட்' பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்!!

இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிப்புக்குள்ளான மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. மாநிலத்தின் தலைநகரான மும்பையில் ஊரடங்கு அமலில் இருப்பதால், சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரை அழைத்துச் செல்ல “பெஸ்ட்” என்று சொல்லக்கூடிய ‘ப்ரிஹன்மும்பை எலெக்ட்ரிக் சப்ளை அண்ட் டிரான்ஸ்போர்ட்’ செயல்பட்டு வந்தது.

இந்த நிலையில், போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும், கொரோனா தொற்று ஏற்பட்ட பெஸ்ட் ஊழியர்களுக்கு மருத்துவமனையில் பிரத்தியேக தனிமைப்படுத்தப்பட்ட வார்டு ஒதுக்க வேண்டும், உயிரிழந்த ஊழியரின் குடும்பத்திற்கு இழப்பீடாக ஒரு கோடி தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெஸ்ட் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே 8 பெஸ்ட் ஊழியர்கள் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், 120 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை எடுத்து வருகின்றனர். இந்த வேலை நிறுத்தத்தால், மும்பை நகரம் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.

Exit mobile version