பன்முக படைப்பாளி பா.ரஞ்சித் – திரையில் அரசியல் பேசும் கலைஞன்!

தனது திரைப்படங்களில், எந்தவித சமரசத்திற்கும் இடமில்லாமல், அடித்தட்டு அரசியலை பேசி வரும் இயக்குநர் பா.ரஞ்சித்தின் பிறந்தநாளான இன்று. அவரை பற்றி பேசுகிறது இந்த செய்தித் தொகுப்பு.

 

சென்னை ஆவடியில் 1982 ஆம் ஆண்டு பிறந்த இயக்குநர் பா.ரஞ்சித், ஆரம்ப காலங்களில் இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். 2012ஆம் ஆண்டு அவர் இயக்கத்தில் முதலாவதாக வெளியான அட்டகத்தியில், சென்னையின் புறநகர் பகுதியில் வாழும் சராசரி இளைஞனின் காதல், வாழ்வியலை அதற்கே உரிய கேலி, கிண்டலுடன் காட்சிப்படுத்தி ரசிகர்களை அசத்தினார்.

இதனை தொடர்ந்து ரஞ்சித் இயக்கிய இரண்டாவது படமான மெட்ராஸ், வடசென்னையில் நிகழும் அரசியலையும், அதன் பின்னணியையும் மிக வெளிப்படையாகவே பேசியது. இதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினியை வைத்து கபாலி படத்தை தந்தார் பா.ரஞ்சித். இந்த கூட்டணி காலா படத்திலும் தொடர்ந்தது. இயக்குநராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராக அவர் தயாரித்த பரியேறும் பெருமாள் படம், தமிழ் சினிமாவை உலக அரங்கில் பெருமைபட வைத்தது.

திரைப்படங்கள் தவிர்த்து பா.ரஞ்சித், தனது நீலம் பண்பாட்டு மையத்தின் மூலம், கூகை திரைப்பட இயக்கம், நூலகம் ஆகியவற்றை ஆரம்பித்து, இளம் படைப்பாளர்கள் உருவாக புதிய தலம் அமைத்துக் கொடுத்துள்ளார். ரஞ்சித்தின் அடுத்த படமாக உருவாகி வரும் சார்பட்டா பரம்பரை, இப்போதே சினிமா ரசிகர்களிடம் அதீத ஆவலை ஏற்படுத்தியுள்ளதே, அவரது வெற்றியின் தனிச்சிறப்பு.

 

Exit mobile version