முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து ஆயிரத்து 132 கன அடியாக அதிகரித்துள்ளது.

கடந்த 10 தினங்களுக்கு முன்பாக தேக்கடி மற்றும் முல்லைப் பெரியாறு பகுதிகளில்
பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில் மழை அளவு குறைந்ததால் 450 கன அடியாக நீர்வரத்து குறைந்தது. இந்த நிலையில் தற்போது 2 தினங்களாக தேக்கடியில் பெய்து வரும் கன மழையால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து ஆயிரத்து 132 கன அடியாக உயர்ந்துள்ளது. அணைப் பகுதிகளில் தொடர்ந்து மழைப் பெய்து வருவதால் மேலும் அணைக்கு நீர்வரத்து உயர வாய்ப்புள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 124 புள்ளி 5 அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து தேனி மற்றும் மதுரை நகர மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு ஆயிரத்து 360 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

Exit mobile version