முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வு

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாலும், தேனியில் தொடர்ந்து பெய்து வரும் காரணமாகவும் வைகை அணையின் நீர்மட்டம் 55 அடியை எட்டியுள்ளது.

71அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் மழை இல்லாததால் கடந்த மாதம் துவக்கத்தில் 27 அடியாக சரிந்தது. இந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அணையில் இருந்து அதிகப்படியான நீர் திறந்து விடப்பட்டதால் வைகை அணை நீர்மட்டம் மளமளவென உயர்ந்து 51 அடியை எட்டியது. இந்த நிலையில் தமிழகத்தின் தேனி மாவட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு அயிரத்து 350 அடியாக உயர்ந்தது. தற்போது வைகை அணையின் நீர்மட்டம் 5 அடி அதிகரித்து 55 புள்ளி 07 அடியை எட்டியுள்ளது. அணையின் நீர் இருப்பு 2 ஆயிரத்து 708 மில்லியன் கன அடியாக உள்ள நிலையில், பாசன வசதிக்காக வைகை அணையில் இருந்து 960 கன அடிவீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது

Exit mobile version