திடீர் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் வீடு திரும்பினார்.
உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவ் வயது மூப்பின் காரணமாக உடல்நல குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இந்தநிலையில் நேற்று திடீரென உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட முலாயம் சிங் யாதவ், லக்னோ நகரில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்ததால் முலாயம் சிங் யாதவுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனிடையே உடல்நிலை சீரானதை தொடர்ந்து மருத்துவமனையிலிருந்து முலாயம் சிங் யாதவ் வீடு திரும்பினார்.