இரண்டு நாளில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.29,000 கோடி உயர்வு

ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இரண்டு நாட்களில் 29 ஆயிரம் கோடி ரூபாய் உயர்ந்ததை அடுத்து அவர் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 13ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. அதையடுத்து அந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 11 விழுக்காடு உயர்ந்தது. இதனால் அந்த நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை வைத்திருக்கும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இரண்டே நாட்களில் 29 ஆயிரம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் உலகப் பணக்காரர்கள் வரிசையில் அவர் 13ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

Exit mobile version