முதுமலை புலிகள் வனப்பகுதியில் ஒய்யாரமாக வலம் வரும் வன விலங்குகள்

முதுமலை புலிகள் வனப்பகுதி பசுமைக்கு திரும்பியுள்ளதால், வன விலங்குகள் ஒய்யாரமாக வலம் வருகின்றன.

கோடை காலத்தில் முதுமலை புலிகள் காப்பகம் வறட்சியுடன் காணப்படும்.

ஆனால் கடந்த ஒரு வாரமாக அங்கு பெய்த தொடர் மழையால், வனப்பகுதி பச்சை பசேலென்று ரம்மியமாக காட்சியளிக்கிறது.

இந்த நிலையில், வனத்திலிருந்து வெளியேறிய மான்கள், யானைகள், கரடி உள்ளிட்ட விலங்குகள் சாலையோரங்களில் உணவு தேடி முகாமிட்டுள்ளன.

ஓடைகளில் அதிகளவு தண்ணீர் செல்வதால் அங்கு யானைகள் முகாமிட்டுள்ளன.

Exit mobile version