தொடர் கனமழையால் நீலகிரி முதுமலை புலிகள் காப்பகம் மீண்டும் பசுமைக்கு திரும்பியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு துவக்கம் முதலே கடும் உறைபனி பொழிவு நிலவியதால் தேயிலைத் தோட்டங்கள், வனப்பகுதிகளில் இருந்த செடி கொடிகள் முழுமையாக கருகி வறண்டு காணப்பட்டன. வரலாறு காணாத காட்டு தீ ஏற்பட்டு 8 ஆயிரம் ஹெக்டர் வனபகுதி எரிந்து சேதமானது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக நீலகிரி மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதியில் இரவு, பகலாக கனமை பெய்ததால் காட்டுத்தீ கட்டுப்பட்டது. இதனால், வனப்பகுதியில் மீண்டும் புற்கள் வரத் துவங்கிள்ளது. தண்ணீர் மற்றும் உணவு தேடி இடம் பெயர்ந்து வனவிலங்குகள் மீண்டும் முதுமலை வனப்பகுதிக்கு வரத்தொடங்கியுள்ளன. மழை பெய்து ஓய்ந்த நேரத்தில், சாலையோரத்தில் இருந்த மயில் ஒன்று தோகை விரித்து நடனமாடிய காட்சிகள் சுற்றுலா பயணிகளை கவர்ந்தது. மீண்டும் பசுமையாக காட்சியளிக்கும் வனப்பகுதியால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்