முதுமலை காப்பகம் -பந்திப்பூர் தேசிய பூங்கா இடையில் காட்டுத்தீ

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கர்நாடக மாநிலம் பந்திப்பூர் தேசிய பூங்கா ஆகிய இரு வனப்பகுதிகளுக்கு இடையை மீண்டும் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீயை கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கர்நாடக மாநிலம் பந்திப்பூர் தேசிய பூங்கா ஆகிய பகுதிகளில் மழையின்றி கடும் வறட்சி காரணமாக இந்த ஆண்டு அதிகளவில் காட்டுத் தீ ஏற்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பந்திப்பூர் தேசியப் பூங்காவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் சுமார் 8 ஆயிரத்து 900 ஏக்கருக்கு மேல் வனப்பகுதி எரிந்து நாசமாகியது.

இந்நிலையில் நேற்று பிற்பகல் முதல் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கர்நாடக மாநிலம் பந்திப்பூர் தேசிய பூங்கா ஆகிய இரு வனப்பகுதிகள் இடையே காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 900 ஏக்கருக்கும் மேல் வனப்பகுதிகள் எரிந்து நாசமாகியுள்ளன. தீயை கட்டுபடுத்த வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பலத்த காற்று வீசுவதால் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. இதனால் அப்பகுதிகளில் இருந்து யானை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன. காட்டுத் தீயை கட்டுப்படுத்த ஹெலிகாப்டரை பயன்படுத்த வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

Exit mobile version