2019 தொடக்கம் சூப்பர்… டோனி பாராக்…

“டோனிக்கு வயதாகிவிட்டது, இனி அவரது ஆட்டம் வெளிப்படாது” என்று பல முறை பலரும் சொன்னாலும், “வயதானலும் நான் சிங்கம் தான்” என்று மீண்டும் ஆஸ்திரேலிய தொடரில் நிரூபித்துள்ளார் டோனி. ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக ஆடி 7 வருடங்களுக்கு பிறகு ஆட்ட நாயகன் விருதை பெற்றுள்ளார். கடைசியாக, 2011ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஆட்ட நாயகன் விருதை டோனி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2019ஆம் ஆண்டு உலக கோப்பைக்கான அணி தேர்வில் பல்வேறு வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் டோனி அணியில் இடம் பெறுவது குறித்து முன்னாள் வீரர்கள் பலர், பல கருத்துக்களை தெரிவித்தனர். அண்மையில் ஆஸ்திரேலிய டி20 தொடரிலும் டோனி நீக்கப்பட்டார்.

ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் மட்டும் இடம் பெற்றிருந்த டோனி தனது ஃபார்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். எப்போதும் கூல்லாக இருக்கும் டோனி, தனது அனுபவமான ஆட்ட திறனால் சிறப்பாக ரன் குவித்து, தன் மீது எழுந்த எதிர்மறை விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து அசத்தியுள்ளார்.

தொடரின் எல்லா ஆட்டத்திலும் அரைசதம் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு பெரும் பங்கு வகித்தார். தொடரின் மூன்று ஆட்டத்தில் மொத்தம் 193 ரன்களை (சராசரி 63.3) சேர்த்துள்ளார் டோனி. இந்த தொடரில் 2 முறை கடைசி வரை களத்தில் நின்று இந்தியாவை வெற்றி பெற செய்துள்ளார்.

இந்நிலையில், 2019ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் டோனியின் ஆலோசனை நிச்சயம் அணிக்கு பேருதவியாக இருக்கும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Exit mobile version