உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 22-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ஃப்ரால் அகமது பந்துவீச்சை தேர்வு செய்தார்.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோகித் சர்மா 113 பந்தில் 140 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணியை துவம்சம் செய்தார். மறுமுனையில் நிதானமாக விளையாடிய கே.எல்.ராகுல் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். பின்னர், களமிறங்கிய கேப்டன் விராட் கோலி அவரது பங்குக்கு 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பாக்கப்பட்ட டோனி, 1 ரன் மட்டுமே எடுத்திருந்தார். இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 336 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து, 337 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. அந்நாட்டு துவக்க வீரர் இமாம், அதிர்ச்சி அளிக்கும் விதமாக 7 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்ததாக ஃபகார் ஜமானுடன், பாபர் அசாம் கைக்கோர்த்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை குவித்தனர்.
இந்நிலையில், ஃபகார் ஜமான் 62 ரன்களும், பாபர் அசாம் 48 ரன்கள் எடுத்தனர். பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க பாகிஸ்தான் தோல்வியை நோக்கி பயணிக்க தொடங்கியது. இந்நிலையில், போட்டிகிடையே எதிர்பாராத விதமாக மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் போட்டியை பார்வையிடுவதற்காக பிரபலங்கள் பலரும் கிரிக்கெட் மைதானத்திற்கு வந்திருந்தனர். இவர்களில், டோனி மகளான ஜீவா டோனியும் ஒருவராவார். அப்போது, காயம் அடைந்த தவானிற்கு பதிலாக இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்ட ரிஷப் பண்ட், ஸிவா டோனி அருகில் உட்கார்ந்து போட்டியை உற்சாக கண்டு ரசித்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில், ஸிவா டோனி மற்றும் பண்ட் ஆகிய இருவரும் நேருக்கு நேர் பார்த்துக்கொண்டு, யார் குரலின் சத்தம் அதிகம் வருகிறது என்ற கத்துவது போன்ற வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்த நிலையில், சமூக வலைதளங்களில் வைரலாகி விட்டது.
Pant gets right down to business! ???#INDvPAK #TeamIndia #RishabhPant pic.twitter.com/yROZUZ8eJk
— Divya (@DhoniAficionado) June 16, 2019