ரஷ்யாவின் ஆளில்லா சோயூஸ் எம்எஸ்-14 விண்கலம் மனித ரோபோவுடன், விண்ணில் ஏவப்பட்டது.
ரஷ்யா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் ஆய்வுக்காக விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன. இங்கு ஆய்வுகளை மேற்கொள்வதற்காகச் சுழற்சி முறையில் வீரர்கள், வீராங்கனைகள் அவ்வப்போது அனுப்பி வைக்கப்படுகின்றனர். அந்த வகையில், இந்த முறை கோள்கள் தொடர்பான ஆய்வுக்காக ரஷ்யா, புதிதாக உருவாக்கப்பட்ட “ஃபெடார்” என்ற விண்வெளி ரோபோவை அனுப்பத் திட்டமிட்டது.
அதன்படி, கஜகஸ்தானில் உள்ள பைக்கானூர் விண்வெளி மையத்திலிருந்து மனித ரோபோவுடன் ‘சோயூஸ் எம்.எஸ்-14’ விண்கலம் விண்ணில் பாய்ந்தது. ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த மனித ரோபோ, நாளை சர்வதேச விண்வெளி நிலையத்தில் இறங்கி, செப்டம்பர் 7ஆம் தேதி வரை விண்வெளி வீரர் அலக்சாண்டர் ஸ்வோர்ட்சோவ்(( Alexander Skvortsov)) என்பவர் கண்காணிப்பில் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும் எனவும், பின்னர் பூமிக்குத் திரும்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.