நெல்லை அரசு மருத்துமனையில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் கருவி திறப்பு

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அரசு  மருத்துமனையில் ரூ. 5.48 கோடி செலவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள எம்.ஆர்.ஐ ஸ்கேன் கருவியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

துவக்க நிகழ்ச்சியில்  ராஜ்ய சபா எம்.பி விஜிலா சத்தியானந்த் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி ஸ்கேன் கருவியை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் புதிய எம்.ஆர். ஐ ஸ்கேன் மூலம் கதிர்வீச்சு இல்லாமல் உடலின் அனைத்து பாகங்களையும் ஸ்கேன் செய்யலாம் என்றும் சென்னை, மதுரைக்கு அடுத்தபடியாக இந்தக் கருவி நெல்லையில் தான் அமைக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

Exit mobile version