திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள எம்.ஆர்.ஐ. ஸ்கேன் இயந்திரத்தை, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ஸ்கேன் மையம் அமைக்க அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பரிந்துரைத்ததை அடுத்து, 5 கோடி மதிப்பில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் இயந்திரம் அமைக்கப்பட்டது.
இந்த ஸ்கேன் இயந்திரத்தை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார். பின்னர் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தாய்-சேய் நல பெட்டகத்தையும் அவர் வழஙகினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக அரசு மருத்துவமனைகள் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.