92வது ஆஸ்கார் விழாவில் விருதுகளை அள்ளும் திரைப்படங்கள்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் உலகப்புகழ் பெற்ற ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

உலகளவில் சிறந்த திரைப்படங்கள், இயக்குநர்கள், நடிகர், நடிகைகளுக்கு, ஆண்டு தோறும் ஆஸ்கர் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்நிலையில், 92வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் சிவப்புக் கம்பள வரவேற்புடன் கோலாகலமாக தொடங்கியது. உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான திரை நட்சத்திரங்கள் இவ்விழாவில் பங்கேற்றுள்ளனர்.

சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் தட்டிச்சென்றார். சிறந்த துணை நடிர்களுக்கான பரிந்துரை பட்டியலில் 5 நடிகர்கள் இருந்த நிலையில், ONCE UPON A TIME IN HOLLYWOOD திரைப்படத்திற்காக, இவ்விருது பிராட் பிட்டுக்கு வழங்கப்பட்டது. 1987ம் ஆண்டு முதல் ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் பிராட் பிட், முதல்முறையாக ஆஸ்கர் விருதை பெற்றுள்ளார்.

இதேபோல், சிறந்த அனிமேஷன் படத்துக்கான விருது TOY STORY 4 படத்துக்கும், சிறந்த அனிமேஷன் குறும்படத்துக்கான விருது HAIR LOVE படத்துக்கும் வழங்கப்பட்டது.சிறந்த திரைக்கதைக்கான விருதை “பாரசைட்“ படத்துக்காக பாங் ஜூன் ஹோ, ஹேன் ஜின் ஒன் ஆகியோர் தட்டிச்சென்றனர். சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருது “ஜோஜோ ராபிட்“ படத்துக்காக டெய்கா வெய்ட்டிடி பெற்றார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட “பாரசைட்“ ஹாலிவுட் திரைப்படம், சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருதை தட்டிச்சென்றது. ஜோஜோ ரேபிட், ஜோக்கர், லிட்டில் வுமன், பாரசைட் உள்ளிட்ட 9 திரைப்படங்கள் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், பாரசைட் திரைப்படம் சிறந்த படத்திற்கான விருதை தட்டிச்சென்றது. அந்த படத்தின் இயக்குநர் பாங் ஜூன் ஹோ சிறந்த இயக்குநருக்கான விருதை பெற்றார்.

 

 

Exit mobile version