மேட்டுப்பாளையம் உதகை இடையிலான மலை ரயில் போக்குவரத்து 4 மாதங்களுக்கு பின் மீண்டும் துவங்கியது.
கொரானோ நோய் தொற்று பரவல் அதிகரித்ததால் நீலகிரி மாவட்டத்திற்கு செல்ல கடும் கட்டுப்பாடுகளை தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்ததை தொடர்ந்து சுற்றுலா தளங்கள் மூடபட்டன. இதன்காரணமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு மலை ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. தற்போது அரசு சுற்றுலா தளங்களுக்கு தளர்வுகள் அளிக்கபட்டுள்ள நிலையில் நான்கு மாதங்களுக்கு பிறகு மேட்டுப்பாளையம் உதகை இடையிலான மலை ரயில் போக்குவரத்து இன்று முதல் மீண்டும் துவங்கியுள்ளது. மூன்று பெட்டிகள் இனைக்கப்பட்ட மலை ரயில் காலை 7 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு புறபட்டு சென்றது. முன்பதிவு செய்த நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் மலை ரயிலில் பயணம் மேற்கொண்டனர்.