நீலகிரியில் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள மலைப் பூண்டு

மலைப் பூண்டுகள் அழுகிப் போவதைத் தவிர்க்க நீலகிரி மாவட்ட விவசாயிகள் முன் கூட்டியே அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் தற்போது மலை பூண்டு விவசாயம் அதிகரித்துள்ளது. கொல்லிமலை, கேத்தி பாலாடா, காட்டேரி மற்றும் தலைகுந்தா உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் மலைப் பூண்டு பயிரிடப்பட்டு நல்ல விளைச்சலை தந்துள்ளதால் தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.

இந்நிலையில், கடந்த 10 நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த மலைப் பூண்டுகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஏற்படக்கூடிய நஷ்டத்தை தவிர்க்க முன் கூட்டியே பூண்டு அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மலை பூண்டிற்கு எப்பொழுதும் வரவேற்பு உள்ள நிலையில், தற்போது பூண்டு வரத்து குறைந்துள்ளதால் கிலோ ஒன்றுக்கு 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

Exit mobile version