ஐரோப்பாவின் உயரமான எரிமலையாக கருதப்படும் இத்தாலியில் உள்ள மவுண்ட் எட்னா எரிமலை நெருப்பு குழம்புகளை சீற்றத்துடன் வெளியேற்றி வருகிறது.
எரிமலை வெடிப்பின் போது, வான் நோக்கி பாய்ந்த கரும்புகைகள் அப்பகுதி முழுவதும் சூழ்ந்தது. சாம்பல் மற்றும் பாறை துகள்கள் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கட்டிடங்கள், சாலைகளில் படர்ந்ததால், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாயினர்.
வீடு மற்றும் சாலையில் படர்ந்துள்ள சாம்பல் மற்றும் பாறை துகள்கள் சிரமத்திற்கு இடையே அவர்கள் அகற்றினர். கடந்த மாதம் 24ஆம் தேதி எட்னா எரிமலை வெடித்து சிதறிய போதும் இதே நிலையை ஏற்படுத்தியது.