அன்னை தெரேசா பெண்கள் பல்கலை, துணைவேந்தராக வைதேகி விஜயகுமார் நியமனம்

கொடைக்கானல் அன்னை தெரேசா பெண்கள் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக வைதேகி விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் 12 ஆண்டுகள் பேராசியராக பணியாற்றியுள்ள வைதேகி விஜயகுமார், கனடா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் பல்கலைக்கழகங்களின் சிறப்பு பேராசியராகவும் பணிபுரிந்துள்ளார். இந்நிலையில், அன்னை தெரேசா பெண்கள் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக வைதேகி விஜயகுமாரை தமிழக ஆளுநரும் பல்கலைக்கழகங்களின் வேந்தருமான பன்வாரிலால் புரோகித் நியமனம் செய்துள்ளார். மூன்று ஆண்டுகள் அவர் பதவியில் தொடர்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

Exit mobile version