வாணியம்பாடி பகுதியில் பெற்ற குழந்தையை இடைத்தரகர் மூலம் ஒரு லட்ச ரூபாய்க்கு விற்ற தாய் உட்பட, காவல்துறையினர் 5 பேரை கைதுசெய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் சத்யா இவருக்கு ஆட்டோ ஓட்டுனர் முருகன் என்பவருடன் திருமணம் நடந்தது. சந்தியாவுக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் நடந்து கணவர்களை பிரிந்த நிலையில் மூன்றாவதாக தான் முருகனை திருமணம் செய்துக்கொண்டுள்ளார். முருகனுக்கும் சத்தியா 2 வது மனைவி.
முருகன் – சத்யா இருவருக்கும். ரேணுகாதேவி என்ற மகளும் ஆதித்தியா என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆண் குழந்தை ஆதித்தியா பிறந்து ஒரு வருடம் ஆன நிலையில் முருகன் காசநோயால் பாதிக்கப்பட்டு தர்மபுரியில் தங்கி அங்குள்ள அரசு மருத்துவமனையிலேயெ சிகிச்சைக்கு பெற்றுள்ளார். கடந்த வாரம் வாணியம்பாடி திரும்பி வந்த முருகன் மகள் ரேணுகாதேவியை மட்டும் பார்த்துள்ளார். ஆண் குழந்தை ஆதித்யா இல்லாமல் இருப்பதை கண்டு குழந்தை எங்கே என கேள்வி என்று கேட்டுள்ளார். குழந்தை காணோம், யார் தூக்கிக்கிட்டு போனாங்கன்னு தெரியல என சாதாரணமாக சொல்லியுள்ளார்.
இதில் சந்தேகமடைந்த முருகன், வாணியம்பாடி தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் சத்யாவை அழைத்து விசாரித்தனர், விசாரணையில் தான் பெற்ற குழந்தையை பணத்திற்கு ஆசைப்பட்டு விற்றதை சத்தியா ஒப்புக்கொண்டார். அதே பகுதியை சேர்ந்த கவிதா என்ற இடைத்தரகர் மூலம், பெங்களூரு ஜெய் நகரை சேர்ந்த செருப்பு வியாபாரி ரஹமத்- ஷகினா தம்பதிக்கு 1 லட்சத்துக்கு குழந்தையை விற்றது தெரிந்தது. இதற்கு முன்பணமாக 65 ஆயிரம் பெற்றுள்ளார். மேலும், குழந்தையை விற்பதற்கு சத்யாவின் அக்கா கீதாவும் உடந்தையாக இருந்தாராம். இதன் பேரில் செப்டம்பர் 24ந்தேதி பெங்களூர் ஜெயநகர் பகுதிக்கு சென்ற வாணியம்பாடி கிராமிய காவல்நிலைய ஆய்வாளர் மங்கையர்க்கரசி தலைமையிலான காவலர்கள், குழந்தையை விலைக்கு வாங்கி சென்ற ரஹமத் ஷகிலா தம்பதியினர் வீட்டுக்கு சென்று குழந்தையை மீட்டனர். மேலும் குழந்தையை விற்ற தாய் சத்யா, அவருக்கு உதவிய அவரது பெரியம்மா கீதா, இடைத்தரகர் கவிதா ஆகியோரை வாணியம்பாடி அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் முடிவில் இவர்கள் 5 பேரும் கைது செய்யப்படுவார்கள் எனக்கூறப்படுகிறது.