2 வயது குழந்தையுடன் தாய் மர்ம மரணம்: தலைமறைவாக இருந்த கணவர் கைது

ராணிப்பேட்டை மாவட்டம், மோசூரில் 2 வயது குழந்தையுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தலைமறைவாக இருந்த கணவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

இராணிப்பேட்டை மாவட்டம், மோசூரில் கடந்த 9ஆம் தேதி ரம்யா மற்றும் அவரது 2 வயது மகள் அஸ்வதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். தங்கள் மகளின் சாவில் சந்தேகம் உள்ளதாகக் கூறி ரம்யாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின் அடிப்படையில் தலைமறைவாகியிருந்த ரம்யாவின் கணவர், மாமியார் மற்றும் மாமனார் ஆகியோரைத் தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த உயிரிழந்த ரம்யாவின் கணவர் சதீஷ், மாமனார் ராஜேந்திரன் மற்றும் மாமியார் தனலட்சுமி ஆகியோரை அரக்கோணம் நகரக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version