மாமியார் – மருமகள் இடையே தகராறில் மருமகள் தற்கொலை

பெருந்துறை அருகே வீட்டு வேலை செய்வது தொடர்பாக, மாமியார் – மருமகள் இடையே ஏற்பட்ட தகராறில் மருமகள் தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே விஐயமங்கலத்தில் அருள்பிரகாஷ் – குணசுந்தரி என்கிற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அருள்பிரகாஷின் அம்மா ராஜம்மாளிற்கும் மனைவி குணசுந்தரிக்கும் சமைப்பது முதல் வீட்டை வேலை செய்வது வரை அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனிடையே, வீட்டை சுத்தம் செய்வதில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியது. வாக்குவாதம் முற்றியதை அடுத்து, குணசுந்தரி வீட்டின் அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து குணசுந்தரியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பெருந்துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு மாமியார் ராஜம்மாள் மற்றும் கணவர் அருள்பிரகாஷ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version