மேலூர் அருகே பெற்ற குழந்தைகளுக்கு எலி மருந்து கொடுத்து கொன்ற தாய்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தனது 2 குழந்தைகளை கொன்ற தாய் மற்றும் கள்ளகாதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த 2016ஆம் ஆண்டு சருகுவலையபட்டியை சேர்ந்த ரஞ்சிதா என்ற பெண், கள்ளக்காதலுக்கு இடையூறாக தனது 3 குழந்தைகளுக்கு எலி மருந்து கொடுத்துள்ளார். இதில் மூத்த மகன் மட்டும் உயிர் தப்பிக்க மற்ற இரு குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தன. எலி மருந்து என்று தெரியாமல் குழந்தைகள் தின்றுவிட்டதாக முதலில் விசாரணை தொடங்கியுள்ளது. இந்த நிலையில், வெளிநாட்டில் வேலைபார்த்து வந்த ரஞ்சிதாவின் கணவர் ராமநத்தம், குழந்தைகளின் இறப்பில் மர்மம் உள்ளதாக புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து, காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கள்ளக்காதலன் கல்யாணபெருமாளுடன் சேர்ந்து ரஞ்சிதா சதித் திட்டம் தீட்டி குழந்தைகளை கொன்றது தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த ரஞ்சிதா மற்றும் கள்ளக்காதலன் கல்யாணபெருமாளை 2 ஆண்டுகளுக்கு பிறகு காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

Exit mobile version