அப்பா, மகன்களை இழந்த துயரம் தாங்காமல், ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட தாய்

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே ஏற்பட்ட பட்டாசு விபத்தில் இரண்டு குழந்தைய பறிகொடுத்துவிட்டு வேதனையில் இருந்த தாய் தானும் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரியில் கடந்த ஞாயிற்று கிழமை மோகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடையில் தீவிபத்து ஏற்பட்டது.

பட்டாசு வாங்க வந்த ஒருவருக்கு அதனை எப்படி வெடிப்பது என்பது குறித்து கடை உரிமையாளர் மோகன் செய்முறை விளக்கம் அளித்து கொண்டு இருந்த போது, அதிலிருந்து வெளிபட்ட திப்பொறி ஒன்று கடையில் இருந்த பட்டாசு மீது விழுந்ததே விபத்து ஏற்பட காரணம்.

இந்த விபத்து ஏற்பட்ட போது மோகனின் பேரக்குழந்தைகள் தனூஜ், தேஜஸ் ஆகியோர் பட்டாசு கடையில் இருந்துள்ளனர்.

தீப்பொறி பட்டு கடையில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறுவதை கண்ட மோகன பதறியடித்துக் கொண்டு பேரக்குழந்தைகளை காப்பாற்ற கடைக்குள் சென்றுள்ளார். ஆனால் குழந்தைகளை காப்பாற்ற முடியவில்லை, காப்பாற்ற சென்ற மோகனும் பரிதாபமாக உயிரிழந்தார்.

எதிர்பாரமல் ஏற்பட்ட வெடி விபத்தில் குழந்தைகள் மற்றும் தந்தையை இழந்த சோகத்தில் தாய் வித்யாலட்சுமி கடந்த சில நாட்களாகவே யாருடனும் பேசாமலும் தொடந்து அழுதுகொண்டும் இருந்ததாக கூறப்படுகிறது.

மனமுடைந்து காணப்பட்ட வித்யாலட்சுமி, நேற்று இரவு 2 மணி அளவிலில் வீட்டில் இருந்து மாயமாகி இருக்கிறார். தகவல் அறிந்து உறவினர்கள் அவரை தேடத்தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் லத்தேரி ரயில் நிலையம் தண்டவாளத்தில் பெண் ஒருவரின் சடலம் இருபதை கண்ட சிலர் வித்யாலட்சுமியின் உறவினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

நேரில் சென்று பார்த்த உறவினர்கள் அது வித்யாலட்சுமியின் உடல் தான் என்பதை உறுதி செய்துள்ளனர்.

ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வந்து விசாரணை நடத்தியதில் குழந்தைகளை இழந்த சோகத்தில் இருந்த வித்யாலட்சுமி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

வித்யாலட்சுமியின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தைகள் இறந்த சோகத்தில் தாயும் தற்கொலை செய்து கொண்டது வேலூரில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Exit mobile version