கொரோனா 2ம் அலையில் சிக்கும் இளம் வயதினர்

கொரோனா இரண்டாம் அலையில் தினசரி இறப்பு உச்சத்தை அடைந்துள்ள நிலையில், இதில் 20 முதல் 30 வயதினர் உயிரிழக்கும் சதவிகிதம் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா முதல் அலையை விட இரண்டாம் அலையில் ஏராளமானோருக்கு தொற்று பரவிய நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கையும் கணிசமாக கூடி வருகிறது.
இதுவரை ஏற்பட்டுள்ள கொரோனா உயிரிழப்புகளில் கடந்த மே மாதத்தில் மட்டும் சுமார் 50 சதவீத உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டு அறிக்கையின் படி, ஒரே நாளில் 460 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் 14 பேர் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக உயிரிழந்த இளம் வயதினர் எவருக்கும் இணை நோய்கள் இல்லாத நிலையில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 மாத ஆண் குழந்தை கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி, 6 நாட்கள் சிகிச்சையில் இருந்தும் நலம் பெறாமல் பரிதாபமாக உயிரிழந்தது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.வயது முதிர்ந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு மிக ஆபத்து என்ற நிலை தற்போது இளம் வயதினரையும் ஆட்கொண்டுள்ளதோ என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சைகள் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

Exit mobile version