ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

விடுமுறை தினத்தையொட்டி ராமேஸ்வரத்தில் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

புனித தலமான ராமேஸ்வரம் சுற்றுலா தலமாகவும் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி இந்தியா முழுவதிலுமிருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்தவண்ணம் உள்ளனர்.ராமநாதசுவாமி கோயிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வும் நடைபெறும். இங்குள்ள கடற்கரையில் ஆண்டுதோறும் தர்ப்பணம் கொடுப்பவர்களை காண முடியும்.

மேலும் சபரிமலைக்கு சென்றுவிட்டு ஐயப்ப பக்தர்கள் ராமேஸ்வரம் வந்து செல்வது உண்டு. இங்குள்ள பாம்பன் பாலம், படகுசவாரி உள்ளிட்டவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இந்நிலையில், தற்போது அரையாண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், ராமேஸ்வரத்தில் குடும்பத்துடன் வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் இங்குள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version