கூகுள் இந்தியா நிறுவனம் 2019ம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட பெயர்களை துறை ரீதியாக வெளியிட்டுள்ளது.
அந்த பட்டியலில் இந்தியாவின் 2019ம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களில் இந்திய ராணுவ வீரர் அபிநந்தன் முதலிடத்தை பிடித்துள்ளார். இரண்டாவதாக பாடகர் லதா மங்கேஷ்கரும், மூன்றாவது இடத்தை முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங்கும், 5வதாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிசப் பண்ட் பிடித்துள்ளனர்.
அதேபோல் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களில் கபீர் சிங் முதலிடமும், அவெஞ்சர்ஸ் : எண்ட்கேம் 2ம் இடமும், வார் படமும் 8வது இடமும், உரி: சர்ஜிக்கல் ஸ்டிரைக் 10 இடமும் பிடித்துள்ளது.
விளையாட்டு துறையை பொறுத்தவரை முதல் இடத்தை 2019ம் ஆண்டு உலகக்கோப்பையும், Pro Kabaddi League 2ம் இடத்தையும், Ashes தொடர் 8வது இடத்தையும், Indian Super League 10வது இடத்தையும் பிடித்துள்ளது.
செய்திகளை பொறுத்தவரை 2019 நாடாளுமன்ற தேர்தல், சந்திரயான்-2, சட்டப்பிரிவு 370 ஆகியவை முதல் 3 இடங்களையும், புல்வாமா தாக்குதல், ஃபானி புயல், அயோத்தி தீர்ப்பு, அமேசான் காட்டுத்தீ ஆகியவை டாப் 10-ல் இடம் பெற்றுள்ளன.
அதேபோல் ஆதாருடன் பேன் கார்டு இணைப்பது, பப்ஜி எப்படி விளையாடுவது, சுங்கச்சாவடிகளில் Fastag எப்படி பெறுவது போன்ற வார்த்தைகளும் 2019ல் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூகுள் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.