கொசுவலை தொழிற்சாலையில் சுங்கவரித்துறை அதிகாரிகள் சோதனை

கரூர் மாவட்ட திமுக மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜியின் உதவியாளருக்கு சொந்தமான கொசுவலை தொழிற்சாலையில் சுங்கவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

திமுக மாவட்ட பொறுப்பாளரான செந்தில் பாலாஜியின் உதவியாளர் சுப்பிரமணி. இவர் கரூரை அடுத்த மூர்த்திப்பாளையம் பகுதியில் ரசாயண கலவை கலந்த கொசுவலை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார். தனது அண்ணன் ராசப்பன் பெயரில் இந்த தொழிற்சாலையை அவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் சுங்க வரித்துறையினர் இங்கு அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். இதில் கொசுவலை தயாரிக்க பயன்ப்படுத்தப்படும் நூலின் தரம், தரச்சான்றுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தகவலறிந்து தொழிற்சாலைக்கு விரைந்த திமுக நிர்வாகிகள் அரசு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்போடு சோதனை நடைபெற்று வருகிறது.

Exit mobile version