கோவை – பொள்ளாச்சி இடையே அதிக ரயில்கள் இயக்க, பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கோவை முதல் பொள்ளாச்சி வரையிலான மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக 350 கோடி ரூபாய் செலவில் விரிவுபடுத்தப்பட்டது. கடந்த 2017ஆம் ஆண்டு முதல் சோதனை அடிப்படையில் கோவையில் இருந்து பொள்ளாச்சி வரை பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. அதைதொடர்ந்து மதுரையில் இருந்து கோவை வரை இயக்கப்பட்டு வந்தது. ஆனால் கோவையில் இருந்து முன்பு இயக்கப்பட்டு வந்த ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் இந்த வழித்தடத்தில் இயக்கப்பட வேண்டும் என்பது பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. அதேபோல் கோவை – பொள்ளாச்சி இடையே அதிகப்படியான ரயில்களை இயக்கும்பட்சத்தில் அலைச்சல் மற்றும் செலவு பெருமளவில் குறையும் என்று பயணிகள் தெரிவிக்கின்றனர்.