அமமுக கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில், அமமுக கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.

தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சேர்ந்த அமமுக கட்சியினர், நூற்றுக்கும் மேற்பட்டோர், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். சின்னமனூர் ஒன்றிய செயலாளர் விமலேஸ்வரன் தலைமையில் 20 பேரும், குச்சனூர் 2-வது வார்டு கிளை, துரைசாமிபுரம், தர்மத்துப்பட்டியைச் சேர்ந்த கிளை செயலாளர், நிர்வாகிகள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். அவர்களை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். அண்மையில் நடந்து முடிந்த மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல்களில் டிடிவி தினகரனின் அமமுக கட்சி வேட்பாளர்கள், டெபாசிட் இழந்து படுதோல்வி அடைந்தனர்.இதையடுத்து அமமுக கட்சியினர் தாய்க்கழகமான அதிமுகவில் தொடர்ச்சியாக இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version