நூற்றுக்கும் மேற்பட்ட அமமுகவினர், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் பழனிசாமியின் இல்லத்தில் அவரை சந்தித்து அதிமுகவில் இணைந்தனர்.
காஞ்சிபுரம் மத்திய மாவட்டத்தை சேர்ந்த அச்சிரப்பாக்கம் ஒன்றிய, பேரூராட்சி அமமுக பொறுப்பாளர்கள் 113 பேர், முதலமைச்சரை சந்தித்து, அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் எம்.பி. மரகதம் குமரவேல், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பக்தவச்சலம் , மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் விவேகானந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர். முதலமைச்சரை சந்தித்து அதிமுகவில் இணைந்தவர்கள், அதன்பின் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்தித்து வாழ்த்து பெற்றனர். சமீபத்தில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், அதிமுகவில் அதிக அளவில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.