ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் அதிமுகவில் இணைந்தனர்

சென்னையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

சமீபகாலமாக அமமுக கூடாரம் காலி அடைந்து வருவதை தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் அக்கட்சியில் இருந்து விலகிய பலரும், அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர். அந்த வகையில்,  முன்னாள் சட்டத்துறை அமைச்சர் இசக்கி சுப்பையா தலைமையில் சென்னை கொட்டிவாக்கத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியின் போது, காசிமேடு மீனவர் குடும்பத்தைச் சேர்ந்த தம்பதியின் மகளுக்கு ஜெயஸ்ரீ என்ற பெயரை சூட்டி, முதலமைச்சர் வாழ்த்தினார்.

முன்னதாக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, மற்றும் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் செல்வ மோகன் தாஸ் பாண்டியன் தலைமையில், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

Exit mobile version