நாங்குநேரி பகுதியில் வீசிய கடும் சூறாவளிக் காற்றில் 75,000 மேற்பட்ட வாழை மரங்கள் சேதம்

நாங்குநேரி பகுதியில் வீசிய கடும் சூறாவளிக் காற்றில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தன.

நெல்லை மாவட்டம், நாங்குநேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. சூறாவளிக் காற்றில் பல்வேறு மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும், சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயிகள் பயிரிட்டிருந்த 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. இம்மழையினால் சூரங்கடி, பெரும்பத்து, வீரான்குளம், நாங்குநேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சேதமடைந்தன.

Exit mobile version