ஆண்டிப்பட்டி தொகுதியைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட அமமுகவினர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
டிடிவி தினகரன் தலைமை மீதான அதிருப்தியாலும், அவநம்பிக்கையின் காரணமாகவும் அமமுகவில் இருக்கும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், தாய்க்கழகமான அதிமுகவில் மீண்டும் இணைந்த வண்ணம் உள்ளனர். இந்தநிலையில், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட அமமுகவினர், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர், அதிமுகவை யாராலும் பிளவுபடுத்த முடியாது என்று தெரிவித்தார். அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை மேலும் பலப்படுத்த அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.