கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் முகாமிட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டப்பட்டன.
கடந்த ஒரு வாரகாலமாக சானமாவு வனப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் 2 குழுக்களாக பிரிந்து முகாமிட்டுருந்தன. இதனையடுத்து சுற்றுவட்டார கிராம பகுதி மக்களுக்கு வனத்துறையினர் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்தனர். இப்பகுதியில் அதிகளவு பயிரடப்பட்டுள்ள ராகி, நெல் போன்ற பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருப்பதால், யானைகளை வனத்திற்குள் அனுப்பமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்ற வனத்துறை அதிகாரிகள், பட்டாசு வெடித்து யானைகளின் ஒரு குழுவை தேன்கனிக்கோட்டை வனப்பகுதிகுள் விரட்டியடித்தனர்.